ஆக்கிரமிப்புகள் அகற்றம் குறித்து பெங்களூரு மாநகராட்சி, அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்; கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு


ஆக்கிரமிப்புகள் அகற்றம் குறித்து பெங்களூரு மாநகராட்சி, அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்; கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு
x

ஆக்கிரமிப்புகள் அகற்றம் குறித்து பெங்களூரு மாநகராட்சி, அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

பெங்களூரு:

பெங்களூருவில் கடந்த வாரம் பெய்த கனமழை, பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. பெல்லந்தூர், சர்ஜாப்புரா உள்ளிட்ட பகுதிகள் நீரில் தத்தளித்தன. குடியிருப்பு மற்றும் சாலைகளை வெள்ளம் சூழ்வதற்கு ராஜகால்வாய்கள் ஆக்கிரமிப்பு முக்கிய காரணம் என கூறப்பட்டது. இதையடுத்து பெங்களூரு மாநகராட்சி சார்பில் ராஜ கால்வாய் ஆக்கிரமிப்புகள் பொக்லைன் எந்திரங்கள் உதவியுடன் இடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கர்நாடக ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதி அலோக் ஆராதே, பெங்களூரு மாநகராட்சிக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்து உள்ளார்.

அதில் ஏரிகள் மற்றும் ராஜகால்வாய் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவது மற்றும் உடனடியாக நடவடிக்கைகள் குறித்து, பெங்களூரு மாநகராட்சி சார்பில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றார். இதையடுத்து பேசிய நீதிபதி, சுப்ரமணியபுரா ஏரியில் ஒரு ஏக்கர் அளவிற்கு நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அதை மீட்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கிறார்களா? என்று கேள்வி எழுப்பினார்.

1 More update

Next Story