ரூ.5 லட்சம் ஊழல் குற்றச்சாட்டு: பெங்களூரு மாவட்ட கலெக்டர் மஞ்சுநாத் அதிரடி இடமாற்றம்


ரூ.5 லட்சம் ஊழல் குற்றச்சாட்டு: பெங்களூரு மாவட்ட கலெக்டர் மஞ்சுநாத் அதிரடி இடமாற்றம்
x

ரூ.5 லட்சம் ஊழல் குற்றச்சாட்டு விவகாரத்தில் பெங்களூரு மாவட்ட கலெக்டர் மஞ்சுநாத் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

பெங்களூரு: பெங்களூரு மாவட்ட கலெக்டராக இருந்து வந்தவர் மஞ்சுநாத். இந்த நிலையில், அஜிம்பாஷா என்பவரிடம் ரூ.5 லட்சம் லஞ்சம் வாங்கியதாக துணை தாசில்தார் மகேஷ் மற்றும் ஊழியர் சந்துரு ஊழல் தடுப்பு படை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த லஞ்ச விவகாரத்தில் மாவட்ட கலெக்டர் மஞ்சுநாத்துக்கும் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து மஞ்சுநாத் உட்பட 3 பேர் மீதும் ஊழல் தடுப்பு படை போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். இந்த ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக பெங்களூரு மாவட்ட கலெக்டர் மஞ்சுநாத்திடம் நேற்றுமுன்தினம் ஊழல் தடுப்பு படை போலீசார் விசாரணை நடத்தி இருந்தனர். அவரிடம் 7 மணி நேரத்துக்கும் மேலாக போலீசார் விசாரணை நடத்தி ரூ,5 லட்சம் லஞ்சம் பெற்ற விவகாரம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி இருந்தனர்.

இந்த நிலையில் பெங்களூரு மாவட்ட கலெக்டராக இருந்த மஞ்சுநாத்தை நேற்று இரவு கர்நாடக அரசு அதிரடியாக பணியிட மாற்றம் செய்துள்ளது. அவருக்கு பதிலாக புதிய மாவட்ட கலெக்டராகசங்கப்பா நியமிக்கப்பட்டுள்ளார். ரூ.5 லட்சம் ஊழல் குற்றச்சாட்டில் மஞ்சுநாத் மீது பதிவான வழக்கை ரத்து செய்ய கர்நாடக அரசு உத்தரவிட்டிருந்தது. இதன் காரணமாக மாவட்ட கலெக்டர் மஞ்சுநாத் இடமாற்றம் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story