ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெஸ்காம் அதிகாரி கைது


ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெஸ்காம் அதிகாரி கைது
x
தினத்தந்தி 18 March 2023 11:30 AM IST (Updated: 18 March 2023 11:30 AM IST)
t-max-icont-min-icon

புதிய வீட்டுக்கு மின் இணைப்பு கொடுக்க ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெஸ்காம் அதிகாரி கைது செய்யப்பட்டார்.

சிக்கமகளூரு-

சித்ரதுர்கா மாவட்டம் இரியூர் தாலுகா ஜோடிலிங்காபுரா கிராமத்தை சேர்ந்தவர் குமார். எலெக்ட்ரீசியனான இவர், அந்தப்பகுதியில் உள்ள புதிய வீட்டுக்கு மின் இணைப்பு வழங்குவதற்காக ஒசதுர்காவில் உள்ள பெஸ்காம் அலுவலகத்தில் விண்ணப்பம் செய்தார். அப்போது, பெஸ்காம் அதிகாரி திருப்பதி என்பவர், புதிதாக மின் இணைப்பு வழங்க வேண்டும் என்றால் ரூ.25 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளார். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத, குமார் இதுகுறித்து லோக் அயுக்தா போலீசில் புகார் அளித்தார்.

இதையடுத்து லோக் அயுக்தா போலீசாரின் அறிவுரையின்பேரில் குமார், பெஸ்காம் அதிகாரி திருப்பதியை சந்தித்து ரூ.25 ஆயிரத்தை கொடுத்தார். அந்த பணத்தை திருப்பதி வாங்கினார். அப்போது அங்கு மறைந்து இருந்த லோக் அயுக்தா போலீசார், பெஸ்காம் அதிகாரி திருப்பதியை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து லஞ்சப்பணம் ரூ.25 ஆயிரத்தையும் பறிமுதல் செய்தனர்.


Next Story