காங்கிரஸ் கட்சியின் பலம் அதிகரிப்பு; பாஜகவுக்கு பதற்றம்; ஜெய்ராம் ரமேஷ்
காங்கிரசின் பலம் அதிகரித்து வருவதைக் கண்டு பாஜக பதற்றமடைந்துள்ளது என்று ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.
புதுடெல்லி,
காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், " பாரத் ஜோடோ யாத்திரையை காங்கிரஸ் மேற்கொண்டு வருகிறது.
இந்த யாத்திரை காங்கிரஸ் கட்சிக்கு ஒரு பூஸ்டர் டோஸ் போன்றது. காங்கிரசின் பலம் அதிகரித்து வருவதைக் கண்டு பாஜக பதற்றமடைந்துள்ளது. இந்த ஒற்றுமை நடைப்பயணம் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கு பதற்றத்தை அதிகரித்துள்ளது. அதற்கு காரணம் இந்த ஒற்றுமை யாத்திரையின் மூலம் புதிய ராகுல் காந்தி மற்றும் புதிய காங்கிரஸ் உருவாகியுள்ளது" என்றார்.
Related Tags :
Next Story