பாரத ரத்னா விருது எனக்கு மட்டுமல்ல.. எனது இலட்சியத்திற்கும் கொள்கைகளுக்கும் கிடைத்த மரியாதை: அத்வானி நெகிழ்ச்சி


பாரத ரத்னா விருது எனக்கு மட்டுமல்ல.. எனது இலட்சியத்திற்கும் கொள்கைகளுக்கும் கிடைத்த மரியாதை: அத்வானி நெகிழ்ச்சி
x
தினத்தந்தி 3 Feb 2024 4:57 PM IST (Updated: 3 Feb 2024 5:07 PM IST)
t-max-icont-min-icon

பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே.அத்வானிக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது அறிவித்துள்ளது.

புது டெல்லி,

பா.ஜ.க. மூத்த தலைவரும், முன்னாள் துணை பிரதமருமான எல்.கே.அத்வானிக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது அறிவித்துள்ளது. அவருக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், பாரத ரத்னா விருது குறித்து அத்வானி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது;

பாரத ரத்னா விருது ஒரு நபராக தனக்கு கிடைத்த மரியாதை மட்டுமல்ல. எனது இலட்சியங்களுக்கும் கொள்கைகளுக்கும் கிடைத்த மரியாதை. இன்று எனக்கு வழங்கப்பட்ட பாரத ரத்னா விருதை மிகப் பணிவுடனும் நன்றியுடனும் ஏற்றுக்கொள்கிறேன்.

தன்னுடன் நெருக்கமாகப் பணியாற்றிய பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா மற்றும் அடல் பிஹாரி வாஜ்பாய் இருவரையும் இந்நாளில் நன்றியுடன் நினைவு கூர்கிறேன். மேலும், ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் மோடிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மகத்தான நமது நாடு புகழின் உச்சத்திற்கு முன்னேறட்டும்" இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story