5 ஆயிரம் ஆண்டுகளாக 'பாரத்' ஒரு மதசார்பற்ற நாடாக இருந்தது - ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்


5 ஆயிரம் ஆண்டுகளாக பாரத் ஒரு மதசார்பற்ற நாடாக இருந்தது - ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்
x

Image Courtesy : ANI

5 ஆயிரம் ஆண்டுகளாக ‘பாரத்’ ஒரு மதசார்பற்ற நாடாக இருந்தது என ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

டெல்லியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியின்போது அவர் பேசியதாவது;-

"தேசிய ஒருமைப்பாட்டை நமது தாய்நாட்டின் இன்றியமையாத அங்கமாக கருதுகிறோம். நமது 5,000 ஆண்டுகால கலாச்சாரம் மதசார்பற்றது. முன்னோர்கள் உலக நலனுக்காக 'பாரதத்தை' உருவாக்கினர். அவர்கள் தங்கள் அறிவை நாட்டின் கடைசி நபருக்கும் கடத்தும் ஒரு சமூகத்தை உருவாக்கினர்.

முழு உலகமும் ஒரே குடும்பம், இது எங்கள் உணர்வு. இது ஒரு கோட்பாடு அல்ல. அதை அறிந்து உணர்ந்து அதன்படி நடந்து கொள்ளுங்கள்."

இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Next Story