மத்தியபிரதேசத்தில் இந்த ஆண்டில் மட்டும் 27 புலிகள் பலி..!!


மத்தியபிரதேசத்தில் இந்த ஆண்டில் மட்டும்  27 புலிகள் பலி..!!
x

மத்தியபிரதேசத்தில் இந்த ஆண்டில் மட்டும் 27 புலிகள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

போபால்,

2018-ம் ஆண்டில் எடுக்கப்பட்ட இந்திய அளவிலான புலிகள் கணக்கெடுப்பின்படி, நாட்டிலேயே அதிகபட்சமாக 526 புலிகள் வாழும் மாநிலமாக மத்தியபிரதேசம் விளங்கியது. அதனால் நாட்டின் 'புலி மாநிலம்' என்ற பெருமையையும் பெற்றது.

ஆனால் இந்த ஆண்டு இதுவரை நாடு முழுவதும் 74 புலிகள் உயிரிழந்துள்ள நிலையில், அவற்றில் 27 புலிகள் மத்தியபிரதேசத்தைச் சேர்ந்தவை என்ற தகவல் வெளியாகி உள்ளது. தேசிய புலி பாதுகாப்பு ஆணையம் அதன் இணையதளத்தில் இந்த புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ளது.

மத்தியபிரதேசத்துக்கு அடுத்தபடியாக மராட்டியத்தில் 15 புலிகளும், கர்நாடகத்தில் 11 புலிகளும் இந்தக் காலகட்டத்தில் இறந்துள்ளன. அதற்கு அடுத்தபடியாக அசாமில் 5, கேரளா, ராஜஸ்தானில் தலா 4, உத்தரபிரதேசத்தில் 3, ஆந்திராவில் 2, பீகார், ஒடிசா, சத்தீஷ்கார் மாநிலங்களில் தலா ஒரு புலி இறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புலிகளுக்கு இடையிலான எல்லை மோதல், வயதானது, உடல்நல பாதிப்பு, வேட்டை மற்றும் மின்வேலியில் சிக்குவது போன்றவை புலிகளின் இறப்புக்கு காரணம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story