40 பெண்களுக்கு ஒரே கணவர்...! ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு சென்ற அதிகாரிகளுக்கு அதிர்ச்சி...!


40 பெண்களுக்கு ஒரே கணவர்...!  ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு சென்ற அதிகாரிகளுக்கு அதிர்ச்சி...!
x

40 பெண்கள் ஒரே ஒரு கணவர் என பதிவு செய்துள்ளனர்.அவர் பெயர் ரூப்சந்த்.அப்பகுதியில் வசிக்கும் பல குழந்தைகள் தங்கள் தந்தையை ரூப் சந்த் என்று பதிவு செய்து உள்ளனர்.

பாட்னா

நாட்டிலேயே முதன்முறையாக பீகார் மாநிலத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. பீகார் அரசு சில மாதங்களாக ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி வருகிறது. அங்குள்ள அரசு மக்களின் பொருளாதார, சமூகப் பின்னணியை அறிந்து அவர்களின் வளர்ச்சிக்கான திட்டங்களை வகுக்க வேண்டும் என்று நம்புகிறது. இந்த கணக்கீட்டிற்காக சுமார் ரூ.500 கோடி நிதியையும் பட்ஜெட்டில் அரசாங்கம் ஒதுக்கி உள்ளது. இதற்காக அரசு ஊழியர்கள் வீடு வீடாக சென்று 17 தலைப்புகளில் தகவல்களை சேகரித்து வருகின்றனர்

இத தகவல் சேகரிப்பின் போது அர்வாலி பகுதில் 40 பெண்கள் ஒரே ஒரு கணவர் என பதிவு செய்துள்ளனர்.அவர் பெயர் ரூப்சந்த்.அப்பகுதியில் வசிக்கும் பல குழந்தைகள் தங்கள் தந்தையை ரூப் சந்த் என்று பதிவு செய்து உள்ளனர்.

அரவாலிவார்டு எண்-7ல் சிவப்பு விளக்கு ( விபசார விடுதிகள்) பகுதி உள்ளது. இப்பகுதியில் பல ஆண்டுகளாக பாலியல் தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். ஜாதிவாரி கணக்கெடுப்பின் போது, அரசு ஊழியர்கள் வீடு வீடாகச் சென்று மக்களிடம் தகவல்களை சேகரித்து வருகின்றனர். இத பகுதியில் சுமார் 40 பெண்கள் தங்கள் கணவனின் பெயர் ரூப்சந்த் என்று பதிவு செய்து உள்ளனர். அவர்களின் குழந்தைகளும் தங்கள் தந்தையின் பெயர் ரூப் சந்த் என்று கூறி உள்ளனர்.

23 பெண்களின் ஆதார் அட்டையில் ரூப் சந்த் என்ற கணவர் பெயர் பதிவு செய்யப்பட்டு உள்ளது.ரூப்சந்த் நட்டு சாதியை சேர்ந்தவர்அனைவருக்கும் நாட் ஜாதிக்கு நிர்ணயிக்கப்பட்ட 97 என்ற எண் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. ரூப்சந்த் குறித்து கேட்டதற்கு, பணம் தருபவர் எனது கணவர், குழந்தைகளின் தந்தை என பெண்கள் கூறுகின்றனர்.

இந்த விவரங்களை அதிகாரிகளும் பதிவு செய்துள்ளனர். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதிகாரிகள் உண்மையான விஷயம் என்ன என்று கண்டுபிடிக்க முயன்றார். அவர்களிடம் நடத்திய விசாரணையில் உண்மையான ரூப் சந்த் ஆண் இல்லை என்பது தெரியவந்தது.

அங்குள்ள அனைவரும் பணத்தை ரூப் சந்த் என்று அழைக்கிறார்கள். அங்குள்ள மக்களின் கருத்துப்படி, ரூப் என்றால் பணம். சிவப்பு விளக்கு பகுதியில் வசிப்பவர்கள் ரூபாயை தங்களின் எல்லாமாக கருதுகின்றனர். குழந்தைகளும் இது போலவே கருதுகிறார்கள். அதனால்தான் அனைவரும் தங்கள் கணவர் மற்றும் தந்தையின் பெயர் ரூப் சந்த் என்று கூறுகிறார்கள்.

பெங்கால், ஒடிசா, ஜார்கண்ட் மற்றும் பீகார் மாநிலங்களைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட சிறுமிகள் இங்கு உள்ளனர். ஜமீன்தார் ஆட்சி காலத்தில் நடன கலைஞர்கள் இங்கு குடியேறியதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். அன்றிலிருந்து தலைமுறை தலைமுறையாக இந்தத் தொழில் செய்து வருகிறார்கள்.


Next Story