காதலனுடன் கூலிப்படையை ஏவி கணவனை கொலை செய்த 6 குழந்தைகளின் தாய்; ஜன்னாலோரம் நின்று வேடிக்கை பார்த்தார்


காதலனுடன் கூலிப்படையை ஏவி கணவனை கொலை செய்த 6 குழந்தைகளின் தாய்; ஜன்னாலோரம் நின்று வேடிக்கை பார்த்தார்
x

நூர்ஜகான் தனது கணவர் சம்பாதித்த பணத்தில் ரூ. 50 ஆயிரம் கொடுத்து தனது காதலர் நவுஷாத் ஆலம் மூலம் கூலிப்படையை சேர்ந்த மன்சூர் ஆலமை ஏற்பாடு செய்து உள்ளார்.

பாட்னா

பீகார் மாநிலம் புல்வாரியா தொகுதியின் ஸ்ரீபூர் ஓபியின் லாட்பூர் கிராமத்தில் மீன் வியாபாரி இஷ் முகமது மியான் தனது வீட்டு வாசலில் தூங்கிக் கொண்டிருந்தார்.இரவில் சில மர்ம நபர்களால் அவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இதுகுறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தார்கள்.

கொலைசெய்யபட்ட முகமது மியான் மனைவியின் மொபைல் போன் அழைப்புகளை போலீசார் சோனை செய்தனர். அப்போதுதான் உண்மை தெரிய வந்தது.கொலைக்கான காரணம் அடுக்கடுக்காக வெளிவரத் தொடங்கியது. இது தொடர்பாக போலீசார் குற்றவாளிகள் 4 பேரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட குற்றவாளிகளில், பதுவா பஜாரைச் சேர்ந்த நவுஷாத் ஆலம், பலேபூர் கிராமத்தைச் சேர்ந்த கூலிப்படையை சேர்ந்த மன்சூர் ஆலம், காந்தி பதுவாவைச் சேர்ந்த பர்வேஸ் அன்சாரி அடங்குவர்.

இதில் இறந்தவரின் மனைவி நூர்ஜகான் காத்தூன் தான் முக்கிய குற்றவாளி அவர்தான் ரூ. 50 ஆயிரம் கொடுத்து கூலிப்படையை ஏவி உள்ளார்.

கொலையான மீன் வியாபாரி இஷ் முகமது மியான் ஆறு பிள்ளைகளின் தந்தையான பின்னர் வீட்டின் பொருளாதார நிலையை சரிகட்ட பணம் சம்பாதிப்பதற்காக வெளிநாடு சென்றுள்ளார். கணவன் வெளிநாடு சென்றவுடனேயே மனைவி நூர்ஜகான் பதுவா பஜாரைச் சேர்ந்த நவுஷாத் ஆலமை சந்தித்து உள்ளார். அவர்கள் இருவுருக்கும் இடையில் கள்ளத்தொடர்பு ஏற்பட்டு உள்ளது.

கணவர் நாடு திரும்பிய பிறகும் மனைவியின் கள்ளத்தொடர்பு தொடர்ந்து உள்ளது இதனை அவர் கண்டித்து உள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதை தொடர்ந்து நூர்ஜகானும் அவரது காதலரும் இஷ் முகமது மியானை கொலை செய்யதிட்டமிட்டு உள்ளனர்.

நூர்ஜகான் தனது கணவர் சம்பாதித்த பணத்தில் ரூ. 50 ஆயிரம் கொடுத்து தனது காதலர் நவுஷாத் ஆலம் மூலம் கூலிப்படையை சேர்ந்த மன்சூர் ஆலமை ஏற்பாடு செய்து உள்ளார்.

விசாரணையின் போது கொலையாளிகள் மன்சூர் ஆலம், பர்வேஸ் ஆலம் ஆகியோர் ஆறு குழந்தைகளுக்கு தாயான நூர்ஜகான் ரூ.50 ஆயிரம் கொடுத்து கணவர் முகமது மியானை கொலை செய்ய கூறியதாக தெரிவித்தனர். தாங்கள் 28,000 கொடுத்து துப்பாக்கி மற்றும் 4 தோட்டாக்களை வாங்கியதாக கூறி உள்ளனர்.

கணவனின் கொலையை நேரடியாக பார்ப்பதற்காக துரோக மனைவி ஜன்னல் அருகே நின்று இருந்தார். இதனை கொலையாளி கோபால்கஞ்ச் போலீசார் முன் வாக்குமூலம் அளித்துள்ளார்.


Next Story