பீகாரில் குடிபோதையில் பிடிபடும் முக்கிய பிரமுகர்கள் சொகுசாக ஓய்வெடுக்க "விஐபி வார்டு" தொடக்கம்!


பீகாரில் குடிபோதையில் பிடிபடும் முக்கிய பிரமுகர்கள் சொகுசாக ஓய்வெடுக்க விஐபி வார்டு தொடக்கம்!
x

பீகார் மாநிலத்தில் கடந்த 2016ம் ஆண்டு முதல் மதுவிலக்கு அமலில் உள்ளது.

பாட்னா,

பீகார் மாநிலத்தில் கடந்த 2016ம் ஆண்டு முதல் மதுவிலக்கு அமலில் உள்ளது. இந்த நிலையில், பொது இடங்களில் மது அருந்திவிட்டு போலீசாரிடம் பிடிபடும் விஐபிக்கள் 24 மணி நேரம் தங்க வைப்பதற்காக சமஸ்திபூரில், மாநிலத்தின் கலால் துறை சார்பில் விஐபி அறை கட்டப்பட்டுள்ளது.

பொது இடங்களில் மது அருந்துதல் மற்றும் அது தொடர்பான வழக்கில் கைது செய்யப்படும் விஐபிக்கள், முக்கிய பிரமுகர்கள், அரசு ஊழியர்கள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் சமூகத்தின் உயரடுக்கு மக்களை தங்க வைக்க விஐபி வார்டு என்ற பெயரில் தனியாக அறை ஒதுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கலால் துறை கண்காணிப்பாளர் எஸ்கே சவுத்ரி கூறியதாவது, "தலைமை அதிகாரிகளின் உத்தரவின் பேரில் இந்த ஓய்வு அறை கட்டப்பட்டு உள்ளது. மது அருந்து பிடிபடும் அரசு ஊழியர்கள் விஜபிக்கள், சமூகத்தின் உயரடுக்கு மக்கள் தங்க வைப்பதற்காக விஐபி செல்கள் கட்டப்பட்டுள்ளன.

இந்த செல்லில் இரண்டு படுக்கைகள், குளிர்சாதன வசதி,சோபா, மேஜை, மற்றும் பிற பொருட்கள் வைக்கப்பட்டு உள்ளன.அவர்களின் பாதுகாப்பிற்காக விஐபி வார்டு வாயிலில் பயிற்சி பெற்ற நாய் ஒன்றும் வைக்கப்பட்டுள்ளது" என்றார்.


Next Story