உள்கட்டமைப்பு வளர்ச்சியில் முன்னணி மாநிலமாக பீகார் திகழ்கிறது: துணை முதல்-மந்திரி தேஜஸ்வி யாதவ்


உள்கட்டமைப்பு வளர்ச்சியில் முன்னணி மாநிலமாக பீகார் திகழ்கிறது: துணை முதல்-மந்திரி தேஜஸ்வி யாதவ்
x

பீகாருக்கு சிறப்பு மாநில அந்தஸ்து கிடைத்தால், முதல் 5 மாநிலங்களில் ஒன்றாக பீகாரும் இடம்பெறும்.

பாட்னா,

மத்திய நிதியமைச்சகத்தின் செலவினத் துறை, 2022-23 நிதியாண்டில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு 15வது நிதிக் குழுவின் பரிந்துரையின் பேரில், ரூ.4761 கோடி மானியமாக வெளியிட்டுள்ளது.

இதில், பீகாரின் பங்காக, ரூ.7.35 கோடி மட்டுமே வந்துள்ளது. இதில், பீகாரின் அண்டை மாநிலமான ஜார்க்கண்ட் சுமார் ரூ.12 கோடியும், உத்தரபிரதேசம் ரூ.1988 கோடியும் பெறும்.இந்நிலையில், பீகாருக்கு எதிராக பாரபட்சம் உள்ளது என்று அம்மாநில துணை முதல்-மந்திரி தேஜஸ்வி யாதவ் கூறினார்.

பாட்னாவில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த தேஜஸ்வி கூறுகையில், பா.ஜனதா கட்சியின் மத்திய அரசின் வெறுப்பே, மாநிலத்தின் பின்தங்கிய நிலைக்கு காரணம்.உள்கட்டமைப்பு வளர்ச்சியில் முன்னணி மாநிலமாக பீகார் உள்ளது.பீகாருக்கு சிறப்பு மாநில அந்தஸ்து கிடைத்தால், இரண்டு ஆண்டுகளில் நாட்டின் முதல் 5 மாநிலங்களில் ஒன்றாக பீகாரும் இடம் பெறும்.

நாங்கள் எவ்வளவோ முயற்சி செய்தும் மத்திய அரசால் பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படவில்லை.மத்திய அரசிடம் இருந்து கொஞ்சம் ஒத்துழைத்தால் பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து கிடைக்கும்.மத்திய அரசு செலவு செய்ய ரூ.7 கோடியே 35 லட்சம் கொடுத்துள்ளது. இதில் பீகாரின் வளர்ச்சி எப்படி இருக்கும்? பீகாருக்கு எதிராக பாரபட்சம் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story