கால்நடை மருத்துவர் கடத்தப்பட்டு கட்டாய திருமணம், அழுது கொண்டே தாலி கட்டினார்
அதிக ஊதியம், சொத்து வைத்திருக்கும் திருமணம் ஆகாத ஆண்களை கடத்திச் சென்று கத்தி, துப்பாக்கி முனையில் திருமணம் செய்து வைக்கும் சம்பவம் நடைபெற்று வருகிறது.
பாட்னா
பீகார் மாநிலத்தின் பெகுசராய் மாவட்டத்தில் விலங்கு ஒன்றுக்கு உடல் நிலை சரியில்லை என கூறி கால்நடை மருத்துவருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கால்நடை மருத்துவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
அங்கு அவரை மிரட்டி ஒரு பெண்ணின் கழுத்தில் கட்டயா தாலி கட்ட வைத்து. கட்டாய திருமணம் செய்து வைத்தனர்."மணமகனின் தந்தை போலீஸ் நிலையத்தில் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்துள்ளார்.
மணமகன் கடத்தல் அல்லது கட்டாய திருமணம் என்பது பீகார், ஜார்கண்ட் மற்றும் உத்தரபிரதேசத்தின் சில பகுதிகளில் அடிக்கடி நடக்கும் ஒரு நிகழ்வு ஆகும், துப்பாக்கி முனையில் வாலிபர்கள் கடத்தபட்டு அங்கு திருமணம் செய்ய கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். பெரும்பாலும் நிதி மற்றும் சமூக பாதுகாப்பு உள்ளவர்கள், மணமகளின் குடும்பத்தினரால் கடத்தப்பட்டுஇவ்வாறு திருமணம் செய்து வைக்கப்படுகிறார்கள்.
அதிக ஊதியம், சொத்து வைத்திருக்கும் திருமணம் ஆகாத ஆண்களை கடத்திச் சென்று கத்தி, துப்பாக்கி முனையில் திருமணம் செய்து வைக்கும் சம்பவம் நடைபெற்று வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன் பீகார் மாநிலத்தில் இதே போன்ற சம்பவம் அரங்கேறியது.
சில ஆண்டுகளுக்கு முன்பு, பீகாரில் பொகாரோ ஸ்டீல் ஆலையில் ஜூனியர் மேனேஜராக இருந்த 29 வயதான வினோத் குமார், பாட்னாவில் உள்ள பண்டாரக் பகுதியில் கடத்தப்பட்டு கடுமையாகத் தாக்கி திருமணம் செய்து வைக்கபட்டார். குமார் மணமகன் உடையில் சடங்குகளை நிறுத்துமாறு கெஞ்சும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது.