ஆயிரம் ரெய்டுகளை நடத்தினாலும் என்னிடமிருந்து எதுவும் கிடைக்காது ; மனிஷ் சிசோடியா
1,000 ரெய்டுகளை நடத்தினாலும் என்னிடமிருந்து எதுவும் கிடைக்காது என தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கூறியுள்ளார்.
புதுடெல்லி,
1,000 ரெய்டுகளை நடத்தினாலும் என்னிடமிருந்து எதுவும் கிடைக்காது என தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கூறியுள்ளார்.
டெல்லி சட்டப்பேரவையின் ஒரு நாள் சிறப்புக் கூட்டத்தொடர் இன்று நடைபெற்று வருகிறது. சட்டப்பேரவையில் இன்று பேசிய மணீஷ் சிசோடியா, 'முதல்முறையாக ஒரு எப்.ஐ.ஆரில் 'தகவல்' என்று பல இடங்களில் இருப்பதைப் பார்க்கிறேன். இது தவறான முதல் தகவல் அறிக்கை. என்னுடைய வீடு, அலுவலகத்தில் 14 மணி நேரம் நடத்திய சோதனையில் ஒரு பைசா கூட அவர்களுக்கு கிடைக்கவில்லை. இன்னும் 1000 ரெய்டுகளை நடத்துங்கள், ஆனால் நீங்கள் என்னிடம் எதையும் கண்டுபிடிக்க முடியாது.
Related Tags :
Next Story