சிவசேனா வேட்பாளருக்கு எதிராக பா.ஜ.க. வேட்பாளரை களமிறக்க வேண்டாம்; பட்னாவிசுக்கு ராஜ் தாக்கரே கடிதம்


சிவசேனா வேட்பாளருக்கு எதிராக பா.ஜ.க. வேட்பாளரை களமிறக்க வேண்டாம்; பட்னாவிசுக்கு ராஜ் தாக்கரே கடிதம்
x

மராட்டியத்தில் அந்தேரி கிழக்கு இடைத்தேர்தலில் சிவசேனா வேட்பாளருக்கு எதிராக பா.ஜ.க. வேட்பாளரை களமிறக்க வேண்டாம் என துணை முதல்-மந்திரி பட்னாவிசுக்கு ராஜ் தாக்கரே கடிதம் எழுதியுள்ளார்.



மும்பை,


மராட்டியத்தில் அந்தேரி கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்தவர் ரமேஷ் லத்கே. இவரது மறைவை அடுத்து அந்த தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டது. இதற்கான இடைத்தேர்தல் வரும் நவம்பர் 3-ந்தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இந்த தேர்தலில், சிவசேனா (உத்தவ் பாலாசாகேப் தாக்கரே) சார்பில் வேட்பாளராக ருதுஜா லத்கே நிறுத்தப்பட்டு உள்ளார். இந்த நிலையில், லத்கேவுக்கு எதிராக பா.ஜ.க. சார்பில் வேட்பாளர் யாரையும் இடைத்தேர்தலில் களமிறக்க வேண்டாம் என கோரி மராட்டிய நவநிர்மாண் சேனா கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே, மராட்டிய துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசுக்கு கடிதம் வழியே வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

சமூக ஊடகத்தில் வெளியான அந்த கடிதத்தில், ரமேஷ் லத்கே மறைவால், அந்த தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டது. அதனால், இடைத்தேர்தல் நடத்துவது அவசியம் ஆகியுள்ளது. ரமேஷின் மனைவி ருதுஜா வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். மறைந்த எம்.எல்.ஏ. ரமேஷ் லத்கேவுக்கு மரியாதை செலுத்தும் வகையில், இந்த தேர்தலில் மராட்டிய நவநிர்மாண் சேனா சார்பில் யாரும் போட்டியிடவில்லை என தெரிவித்து உள்ளார்.

அரசியல் களத்தில் அவரது பயணம் மற்றும் வளர்ச்சியை நான் கண்டிருக்கிறேன். அதனால், ருதுஜா லத்கேவுக்கு எதிராக பா.ஜ.க. வேட்பாளர் யாரையும் களமிறக்க வேண்டாம் என கடிதத்தில் ராஜ்தாக்கரே கோரிக்கை விடுத்து உள்ளார்.


Next Story