தலித், பழங்குடியினர், ஏழை மக்கள் உரிமைகளை பெறுவதை பாஜக விரும்பவில்லை: ராகுல் காந்தி குற்றச்சாட்டு


தலித், பழங்குடியினர், ஏழை மக்கள் உரிமைகளை பெறுவதை பாஜக விரும்பவில்லை: ராகுல் காந்தி குற்றச்சாட்டு
x

பழங்குடியின சுதந்திரப் போராட்ட வீரர் பிர்சா முண்டாவின் பிறந்தநாளையொட்டி பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசினார்.

மும்பை,

மராட்டிய மாநிலம் விதர்பா பகுதியில் உள்ள வாஷிம் மாவட்டத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தலைமையிலான பாரத் ஜோடோ யாத்திரை இன்று நடந்தது. பேரணியில் பழங்குடியின மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

பழங்குடியின சுதந்திரப் போராட்ட வீரர் பிர்சா முண்டாவின் பிறந்தநாளையொட்டி வாஷிம் மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசினார். அவர் கூறியதாவது:-

அரசியல் சாசனத்தை பாஜக தினமும் தாக்கி வருகிறது. பழங்குடியினர்தான் நாட்டின் உண்மையான உரிமையாளர்கள். அவர்களின் உரிமைகள் மற்ற எல்லோரையும் விட, அவர்களுக்கான உரிமைகள் தான் முன்னிலை வகிக்க வேண்டும். அவர்களின் உரிமைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்

ஆனால் தலித்துகள், ஆதிவாசிகள் மற்றும் ஏழைகள் தங்கள் உரிமைகளைப் பெறுவதை பாஜக விரும்பவில்லை. அவர்கள் தங்கள் உரிமைகளைப் பெறுவதை விரும்பாததால் பாஜக தினமும் அரசியல் சாசனத்தை தாக்குகிறது.

ஆர்எஸ்எஸ், பாஜக பிர்சா முண்டாவின் கொள்கைகளை நான்கு பக்கங்களில் இருந்து தாக்கி வருவதாக ராகுல் குற்றம் சாட்டினார்.


Next Story