தேர்தல் பத்திரங்கள் வாங்கியவர்களின் பெயர்களை வெளியிடுவதை பா.ஜனதா விரும்பவில்லை - மல்லிகார்ஜுன கார்கே


தேர்தல் பத்திரங்கள் வாங்கியவர்களின் பெயர்களை வெளியிடுவதை பா.ஜனதா விரும்பவில்லை - மல்லிகார்ஜுன கார்கே
x

கோப்புப்படம்

பாரத ஸ்டேட் வங்கி அவகாசம் கேட்ட விவகாரத்தில் தேர்தல் பத்திரம் வாங்கியவர்களின் பெயர்களை மறைப்பது ஏன்? என மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பி உள்ளார்.

போபால்,

தேர்தல் பத்திரம் வாங்கியவர்களின் விவரங்களை வெளியிடுவதற்கான கால அவகாசத்தை ஜூன் 30-ந்தேதி வரை நீட்டிக்க பாரத ஸ்டேட் வங்கி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளது.

இதை எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்து வரும் நிலையில், தேர்தல் பத்திரம் வாங்கியவர்களின் பெயரை வெளியிட பா.ஜனதா விரும்பவில்லை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக மேலும் அவர் கூறுகையில், 'தேர்தல் பத்திரங்கள் ரகசியமாக வழங்கப்பட்டவர்களின் பெயர்களை வெளியிடாமல், பா.ஜனதாவின் பேச்சைக் கேட்டு பாரத ஸ்டேட் வங்கி நடக்கிறது. இந்த பெயர்களை ஏன் மறைக்கிறீர்கள்? இதன் மூலம் இவர்கள் அனைவரும் கொள்ளையடித்து நன்கொடை வசூல் செய்துள்ளதும், இந்த கொள்ளையை அவர்கள் தொடர விரும்புவதும் தெளிவாகிறது' என தெரிவித்தார்.

1 More update

Next Story