கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சியை தூக்கி எறிய வேண்டும்; சித்தராமையா வேண்டுகோள்


கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சியை தூக்கி எறிய வேண்டும்; சித்தராமையா வேண்டுகோள்
x
தினத்தந்தி 17 April 2023 12:15 AM IST (Updated: 17 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சியை தூக்கி எறிய வேண்டும் என்று சித்தராமையா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பெங்களூரு:

கோலாரில் நடைபெற்ற காங்கிரசின் 'ஜெய் பாரத்' பொதுக்கூட்டத்தில் சித்தராமையா கலந்துகொண்டு பேசியதாவது:-

நற்பெயருக்கு களங்கம்

கர்நாடகத்தில் பா.ஜனதா 4 ஆண்டுகள் ஆட்சி செய்துள்ளது. இரட்டை என்ஜின் ஆட்சியில் கர்நாடகம் வேகமாக முன்னேறி வருவதாக பிரதமர் மோடி மற்றும் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை சொல்கிறார்கள். ஆனால் கர்நாடகம் இதற்கு முன்பு இந்த அளவுக்கு கெட்ட பெயரை வாங்கியது இல்லை. இது பா.ஜனதா ஆட்சியில் நடந்துள்ளது.

கர்நாடகத்தின் பெருமையை இந்த பா.ஜனதா பாழடித்துவிட்டது. ஒப்பந்ததாரர்கள் சங்கத்தினர் பா.ஜனதா அரசு 40 சதவீத கமிஷன் கேட்பதாக கூறி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினர். அந்த அளவுக்கு கர்நாடகத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. இத்தகைய ஊழல் அரசை நான் முன்பு எப்போதும் பார்த்தது இல்லை. கர்நாடகத்தின் வங்கிகள் மூடிவிட்டனர்.

வேலை வாய்ப்புகள்

இப்போது கர்நாடக பால் கூட்டமைப்பையும் அமுல் நிறுவனத்துடன் இணைக்க முயற்சி செய்கிறார்கள். பா.ஜனதாவின் இந்த முயற்சியை நாம் தடுத்து நிறுத்த வேண்டும். அதனால் பா.ஜனதா அரசை தூக்கி எறிய மக்கள் தயாராக வேண்டும். வீடுகளுக்கு இலவச மின்சாரம் உள்பட 4 திட்டங்களை காங்கிரஸ் அறிவித்துள்ளது. இதை நாங்கள் உறுதியாக செயல்படுத்துவோம்.

அரசு துறைகளில் உள்ள காலியாக உள்ள 2½ லட்சம் காலியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுப்போம். தனியார் துறையில் அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம். பா.ஜனதாவின் விரோத அரசியலால் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது. இதை நாங்கள் சரிசெய்வோம்.

இவ்வாறு சித்தராமையா பேசினார்.


Next Story