ராகுல்காந்திக்கு கிடைக்கும் மக்கள் செல்வாக்கை பா.ஜ.கவினரால் சகித்து கொள்ள முடியவில்லை - டி.கே.சிவக்குமார்
ராகுல்காந்திக்கு கிடைக்கும் மக்கள் செல்வாக்கை பா.ஜ.கவினரால் சகித்து கொள்ள முடியவில்லை என்று டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு,
கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
கர்நாடக சட்டசபை தேர்தலுக்காக நானும், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையாவும் பஸ் யாத்திரை செல்ல உள்ளோம். தற்போது இந்த பஸ் யாத்திரையை நிறுத்தும் நோக்கத்துடன் கொரோனா பரவலை அரசு கையில் எடுத்து வருகிறது.
சட்டசபை தேர்தலை சந்திக்கும் விதமாக மாநிலத்தின் பல பகுதிகளுக்கு காங்கிரஸ் கட்சி பஸ் யாத்திரை மேற்கொள்ள இருக்கிறது. இந்த பஸ் யாத்திரையை தடுக்க அரசால் மட்டும் இல்லை, யாராலும் சாத்தியமில்லை. பஸ் யாத்திரை திட்டமிட்டபடி நடைபெறும்.
மக்கள் காங்கிரஸ் கட்சியை ஆதரிக்க தயாராகி விட்டனர். ராகுல்காந்தியின் நடைபயணத்தையும் தடுக்க பா.ஜனதாவினர் முயற்சிக்கிறார்கள். ராகுல்காந்திக்கு கிடைக்கும் மக்கள் செல்வாக்கை சகித்து கொள்ள பா.ஜனதாவினரால் முடியவில்லை. அதனால் தான் நடைபயணத்தை தடுக்க முயற்சிக்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.