சிக்கமகளூரு திருவிழாவை வைது பா.ஜனதா தேர்தல் பிரசாரம் செய்துள்ளது


சிக்கமகளூரு திருவிழாவை வைது பா.ஜனதா தேர்தல் பிரசாரம் செய்துள்ளது
x
தினத்தந்தி 27 Jan 2023 12:15 AM IST (Updated: 27 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சிக்கமகளூரு திருவிழா பெயரில் பா.ஜனதா தேர்தல் பிரசாரம் செய்துள்ளது என்று ஜனதாதளம்(எஸ்) கட்சி குற்றச்சாட்டியுள்ளது.

சிக்கமகளூரு:-

சிக்கமகளூரு மாவட்ட ஜனதாதளம்(எஸ்) கட்சி செய்தி தொடர்பாளர் கிரீஷ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

சிக்கமகளூரு திருவிழா கடந்த 18-ந் தேதி தொடங்கி 22-ந் தேதி வரை நடந்தது. இந்த திருவிழா விமர்சையாக கொண்டாடவேண்டிய திருவிழாதான். ஆனால் இந்த திருவிழாவிற்காக ரூ.9 கோடி வரை செலவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த ரூ.9 கோடி செலவு தேவையில்லாதது. மக்களின் வரிப்பணம்தான் இது. இந்த ரூ.9 கோடியை சி.டி.ரவி எம்.எல்.ஏ. வீணடித்துள்ளார். இந்த திருவிழா பா.ஜனதாவின் தேர்தல் பிரசாரத்திற்காக நடத்தப்பட்டது போன்று உள்ளது. இந்த பணத்தை ஏழை, எளிய மக்களுக்கு உதவி செய்ய பயன்படுத்தியிருக்கலாம். வீடுகள் இல்லாதவர்கள் வீடுகள் கட்டி கொடுத்திருக்கலாம். விவசாய நிலம் இல்லாதவர்களும் நிலம் வழங்கியிருக்கலாம். படிக்க முடியாத ஏழை குழந்தைகள் பலர் உள்ளனர். அவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கியிருக்கலாம். இந்த திருவிழாவால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தாலும், அவர்கள் இந்த பணத்தால் என்ன லாபம் கிடைத்தது. ஒன்றும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story