"ஹிஜாப் அணிந்த பெண்ணை இந்தியப் பிரதமராகப் பார்க்க விருப்பம்" ஓவைசியை கிண்டல் செய்த பா.ஜ.க.


ஹிஜாப் அணிந்த பெண்ணை இந்தியப் பிரதமராகப் பார்க்க விருப்பம் ஓவைசியை  கிண்டல் செய்த பா.ஜ.க.
x

ஹிஜாப் அணிந்த பெண்ணை இந்தியப் பிரதமராகப் பார்க்க விரும்புவதாக ஓவைசி கூறியதை பாஜக கிண்டல் செய்துள்ளது.

ஐதராபாத்

இன்று பேட்டி அளித்த அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) தலைவர் அசாசுதீன் ஓவைசி கூறும் போது

மதச்சார்பின்மையை அழிக்கவும், நாட்டில் அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்கவும் பாஜக விரும்புகிறது. ஹிஜாப் அணிந்த பெண் ஒருவரை நாட்டின் பிரதமராக பார்க்க நாங்கள் விரும்புகிறோம்.

ஹலால் இறைச்சி, முஸ்லிம்களின் தொப்பி மற்றும் தாடி ஆகியவற்றால் தங்களுக்கு ஆபத்து இருப்பதாக பாஜக நினைக்கிறது. அவர்களின் உணவுப் பழக்கவழக்கங்களில் சிக்கல்கள் உள்ளன. கட்சி உண்மையில் முஸ்லீம் அடையாளத்திற்கு எதிரானது.

இந்தியாவின் பன்முகத்தன்மை மற்றும் முஸ்லிம் அடையாளத்தை முடிவுக்குக் கொண்டுவருவதே பாஜகவின் உண்மையான செயல்திட்டமாக உள்ளது என கூறினார்.

இதுகுறித்து பாஜகவின் ஷெஹ்சாத் பூனவல்லா தனது டுவிட்டரில் "ஹிஜாப் அணிந்த பெண் இந்தியாவின் பிரதமராக வருவார் என்று ஒவைசி ஜி நம்புகிறார்! சரி, அரசியலமைப்புச் சட்டம் யாரையும் தடை செய்யவில்லை, ஆனால் ஹிஜாப் அணிந்த ஒரு பெண் ஏஐஎம்ஐஎம் இன் தலைவராக எப்போது வருவார் என்று சொல்லுங்கள்? அதிலிருந்து ஆரம்பிக்கலாமா?''என கேள்வி எழுப்பி உள்ளார்.



1 More update

Next Story