பெண்ணை தாக்கி துஷ்பிரயோகம் செய்த பா.ஜ.க நிர்வாகி...! அதிர்ச்சி வீடியோ


பெண்ணை தாக்கி துஷ்பிரயோகம் செய்த பா.ஜ.க நிர்வாகி...! அதிர்ச்சி வீடியோ
x

பெண்ணை தாக்கி துஷ்பிரயோகம் செய்த பா.ஜ.க நிர்வாகி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

நொய்டா:

கிசான் மோர்ச்சாவின் தேசிய செயற்குழு உறுப்பினரும், யுவ கிசான் சமிதியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான ஸ்ரீகாந்த் தியாகியின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதில் ஸ்ரீகாந்த் ஒரு பெண்ணை துஷ்பிரயோகம் செய்வது போல் தெரிகிறது. அத்துடன் ஆவர் அந்த பெண்ணிடம் தகராறு செய்யவும் முயன்றுள்ளார்.

நொய்டாவில் உள்ள செக்டார் 93-பியில் அமைந்துள்ள ஹவுசிங் சொசைட்டியில்,மரங்களை நட்டு சட்டவிரோத ஆக்கிரமிப்பு செய்ததாக கூறப்படுகிறது.இதற்கு சங்கத்தில் வசிக்கும் பெண் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்ததால், தியாகி அவரிடம் தவறாக நடந்து கொண்டார். இதற்கிடையில் ஸ்ரீகாந்த அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.

குற்றம் சாட்டப்பட்ட ஸ்ரீகாந்த் தியாகி பா.ஜ.கவின் தலைவர் என்று கூறப்படுகிறது. அவரது டுவிட்டர் பக்கத்தில் இருந்து பெறப்பட்ட தகவலின்படி, அவர் பாஜகவின் (கிசான் மோர்ச்சா) தேசிய செயற்குழு உறுப்பினர் என குறிப்பிடப்பட்டு உள்ளது.

ஸ்ரீகாந்த் பிரதமர் நரேந்திர மோடி, உத்தரபிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் மற்றும் பா.ஜ.க. தலைவர் ஜேபி நட்டா ஆகியோரின் புகைப்படம் அவரது சமூக ஊடக கணக்கில் வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.Next Story