கர்நாடக மாநில அரசுதான் நாட்டிலேயே ஊழல் மிகுந்த அரசாக உள்ளது: ராகுல் காந்தி


கர்நாடக மாநில அரசுதான் நாட்டிலேயே ஊழல் மிகுந்த அரசாக உள்ளது: ராகுல் காந்தி
x

எதையெல்லாம் விற்க முடியுமோ அனைத்தையும் பாஜகவினர் விற்கின்றனர் என்று ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

பெங்களூரு,

பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி தற்போது கர்நாடகாவில் நடைபயணம் சென்று கொண்டிருக்கிறார். கர்நாடகாவின் ஹிரியூர் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி கர்நாடகாவில் ஆளும் பாஜக அரசை கடுமையாக விமர்சித்து பேசினார்.

ராகுல் காந்தி அப்போது கூறியதாவது:- நாட்டிலேயே ஊழல் மிகுந்த மாநில அரசாக கர்நாடக அரசுதான் உள்ளது. ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் 40 சதவீத கமிஷன்களை அவர்கள் பெறுகின்றனர். 1,300 தனியார் பள்ளிகளிடம் 40 சதவீத கமிஷன்களை பெறப்பட்டுள்ளது. நான் சொன்னதாக எடுத்துக்கொள்ள வேண்டாம். பாஜக எம்.எல்.ஏவே இந்த கருத்தை கூறியிருக்கிறார்.

முதல் மந்திரி பதவி 2,500 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டதாக பாஜக எம்.எல்.ஏவே ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கிறார். ரூ.80 லட்சத்திற்கு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பதவி விற்பனை செய்யப்பட்டுள்ளது. கல்லூரி உதவி பேராசிரியர்களின் பணி விற்பனை செய்யப்படுகிறது. எதையெல்லாம் விற்க முடியுமோ அனைத்தையும் பாஜகவினர் விற்கின்றனர்" என்றார்.

1 More update

Next Story