பா.ஜ.க. எம்.பி. அலுவலகத்திற்கு கழுதை, பன்றியுடன் வந்த காங்கிரசார்


பா.ஜ.க. எம்.பி. அலுவலகத்திற்கு  கழுதை, பன்றியுடன் வந்த காங்கிரசார்
x

பா.ஜ.க. எம்.பி. அலுவலகத்திற்கு கழுதை, பன்றியுடன் வந்த காங்கிரசாரால் பரபரப்பு ஏற்பட்டது.

மைசூரு: மைசூரு மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வளர்ச்சிப் பணிகள் நடைபெறவில்லை என முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா குற்றம்சாட்டியிருந்தார். இதற்கு மைசூரு-குடகு தொகுதி பா.ஜனதா எம்.பி. பிரதாப் சிம்ஹா இந்த விவகாரம் குறித்து விவாதிக்க சித்தராமையா தயாரா என கேள்வி எழுப்பினார். இதையடுத்து சித்தராமையாவின் உத்தரவின்பேரில், காங்கிரஸ் செய்தி தொடர்பாளரான லட்சுமணன், பிரதாப் சிம்ஹா மைசூரு வளர்ச்சி தொடர்பாக என்னுடன் விவாதிக்க தயாரா என சவால் விடுத்தார்.

இதனால் ஆவேசமடைந்த பிரதாப் சிம்ஹா, லட்சுமணனை ஒருமையில் திட்டியதுடன், கழுதை, பன்றியுடன் ஒப்பிட்டு பேசியிருந்தார். இதை கண்டித்து நேற்று காங்கிரசார் லட்சுமணன் தலைமையில் பன்றி, கழுதையுடன் பிரதாப் சிம்ஹா எம்.பி. அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

1 More update

Next Story