பாஜக நாட்டை விஷமாக்குகிறது - பிருந்தா கரத்
பாஜக நாட்டை விஷமாக்குவதாக மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பிருந்தா கரத் தெரிவித்துள்ளார்.
ஜெய்ப்பூர்,
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சியில் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் பிருந்தா கரத் பங்கேற்றார்.
அந்த நிகழ்ச்சிக்கு பின் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசியதாவது, இந்தியாவின் 75வது சுதந்திர தின ஆண்டை கொண்டாட மத்திய அரசு 'அசாதி கா அம்ரித் மோட்சாவ்' என்ற பெயரில் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து வருகிறது. அம்ரித் மோட்சாவ் நிகழ்ச்சி பெயரில் மோடி அரசு கோடிக்கணக்கான ரூபாய் செலவு செய்கிறது. அதேவேளை பாஜக அரசு நாட்டை விஷமாக்குகிறது' என்றார்.
Related Tags :
Next Story