"பாஜக அனைத்து மதங்களையும் மதிக்கிறது" - பாஜக தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங் அறிக்கை


பாஜக அனைத்து மதங்களையும் மதிக்கிறது - பாஜக தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங் அறிக்கை
x

Image Courtesy : PTI 

எந்த மதத்தினரையும் இழிவுபடுத்துவதை பாஜக கடுமையாக கண்டிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

பாஜக தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங் அந்த கட்சியின் சார்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :

எந்த மதத்தினரையும் இழிவுபடுத்துவதை பாஜக கடுமையாக கண்டிக்கிறது. பாரதிய ஜனதா கட்சி எந்த ஒரு பிரிவினரையோ அல்லது மதத்தையோ அவமதிக்கும் அல்லது இழிவுபடுத்தும் எந்தவொரு சித்தாந்தத்திற்கும் எதிரானது. பாஜக அத்தகைய நபர்களையோ அல்லது தத்துவத்தையோ ஊக்குவிப்பதில்லை

இந்தியாவின் ஆயிரக்கணக்கான வருட வரலாற்றில் ஒவ்வொரு மதமும் மலர்ந்து செழித்திருக்கிறது. பாரதிய ஜனதா கட்சி அனைத்து மதங்களையும் மதிக்கிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஜக செய்தித்தொடர்பாளர் நுபுர் சர்மா சமீபத்தில் இஸ்லாமிய மத கடவுளின் இறை தூதர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் அருண் சிங்கின் இன்றைய அறிக்கையில் நுபுர் சர்மா குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை.


Next Story