காங்கிரசுக்கு இந்துத்வா சொந்தம் இல்லை என்று பா.ஜ.க. கூற எந்த தகுதியும் இல்லை - டி.கே.சிவக்குமார்


காங்கிரசுக்கு இந்துத்வா சொந்தம் இல்லை என்று பா.ஜ.க. கூற எந்த தகுதியும் இல்லை - டி.கே.சிவக்குமார்
x

காங்கிரசுக்கு இந்துத்வா சொந்தம் இல்லை என்று பா.ஜ.க. கூற எந்த தகுதியும் இல்லை என்று டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு,

கர்நாடகத்தில் கடந்த காங்கிரஸ் ஆட்சியில் முதல்-மந்திரியாக இருந்த சித்தராமையா, வீரசைவ-லிங்காயத் சமுதாயத்தை உடைக்க முயன்றதுடன், தனி மத அநதஸ்து பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுத்ததாக பா.ஜனதா குற்றச்சாட்டி வருகிறது.

இந்த விவகாரம் குறித்து கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

வீரசைவ-லிங்காயத் சமுதாய விவகாரத்தில் காங்கிரஸ் நடந்து கொண்டது குறித்து நான் பகிரங்க மன்னிப்பு கேட்டு இருந்தேன். எந்த ஒரு சமுதாய விவகாரத்திலும் கை வைக்க கூடாது என்பது எனது கருத்தாகும்.

வீரசைவ-லிங்காயத் விவகாரத்தில் சித்தராமையாவும், ரம்பாபுரி மடாதிபதியும் பேசியது குறித்து நான் பேசவிரும்பவில்லை. தவறு செய்ததை ஒப்பு கொள்வதில் தவறு இல்லை. சமுதாயத்தை உடைக்கும் முயற்சி வேண்டாம் என்று, இதற்கு முன்பு நான் மந்திரியாக இருந்த போதும் கூறினேன். தற்போதும் அதை தான் கூறுவேன்.

நாட்டில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்ததில் இருந்து, தாங்கள் இந்துக்கள் என்று கூறி வருகின்றனர். இந்துத்வா பற்றி பா.ஜனதா தலைவர்கள் தொடர்ந்து பேசி வருகிறார்கள். எனக்கு சிவனின் மகன் குமாரின் பெயர் வைக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சி தலைவர் பெயர் சித்தராமையா ஆகும்.

காங்கிரஸ் கட்சியினர் தங்களது பெயரை கல், மண் என்று வைத்து கொண்டுள்ளோமா?. இந்துத்வா பா.ஜனதாவின் சொத்தா?. காங்கிரசுக்கு இந்துத்வா சொந்தம் இல்லை என்று பா.ஜனதா கூற எந்த தகுதியும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story