ஜனாதிபதியை விமர்சித்த மேற்கு வங்காள மந்திரிக்கு எதிராக பா.ஜ.க. போராட்டம்


ஜனாதிபதியை விமர்சித்த மேற்கு வங்காள மந்திரிக்கு எதிராக பா.ஜ.க. போராட்டம்
x

Image Courtesy: PTI

ஜனாதிபதியின் தோற்றத்தை அநாகரிகமாக விமர்சித்த மந்திரி அகில் கிரிக்கு எதிராக நேற்று மேற்கு வங்காளத்தின் பல்வேறு பகுதிகளில் பா.ஜ.க. போராட்டம் நடத்தியது.

கொல்கத்தா,

மேற்கு வங்காள மந்திரி அகில் கிரி, நந்திகிராமில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி நிகழ்ச்சியில் பேசுகையில், ஜனாதிபதி திரவுபதி முர்முவின் தோற்றத்தை அநாகரிகமாக விமர்சித்தார். அவருக்கு கண்டனங்கள் எழுந்தநிலையில் மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.

இருப்பினும், அகில் கிரிக்கு எதிராக நேற்று மேற்கு வங்காளத்தின் பல்வேறு பகுதிகளில் பா.ஜனதா போராட்டம் நடத்தியது.

கொல்கத்தா மட்டுமின்றி பஸ்சிம் பர்தாமன், மால்டா, பங்குரா ஆகிய மாவட்டங்களிலும், அகில் கிரி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போராட்டம் நடத்தினர்.

பங்குராவில் நடந்த போராட்டத்தின்போது, மேற்கு வங்காள மாநில பெண் மந்திரி ஜோத்ஸ்னா மண்டியின் காரை போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கிடையே, அகில் கிரியை மந்திரி பதவியில் இருந்து நீக்கக்கோரி, டெல்லியில் ஒரு போலீஸ் நிலையத்தில் பா.ஜனதா எம்.பி. லாக்கட் சட்டர்ஜி புகார் அளித்துள்ளார்.


Next Story