நாடாளுமன்ற தேர்தலில் 'பா.ஜனதா 50 இடங்களைக்கூட வெல்லாது' - நிதிஷ்குமார்
நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா 50 இடங்களைக்கூட வெல்லாது என்று பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.
பாட்னா,
ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் நிதிஷ்குமார் உரையாற்றினார். அப்போது அவர் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை வலியுறுத்தினார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், 'அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் தேசிய அளவில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்தால், பா.ஜனதா வெற்றிபெறும் தொகுதிகளின் எண்ணிக்கை 50-ஐ கூட தாண்டாது. தேர்தல் ஆதாயங்களுக்காக நாட்டின் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்க பா.ஜனதா முயற்சிக்கும். அவர்களின் மோசமான திட்டத்தை முறியடிக்க எச்சரிக்கையாக இருக்க வேண்டிய அவசியம் உள்ளது' என்று தெரிவித்தார்.
தங்கள் (ஐக்கிய ஜனதாதளம்) ஓட்டுவங்கி நிலையாக இருப்பதாக கூறிய நிதிஷ்குமார், பா.ஜனதாவின் சதியால்தான் கடந்த 2020-ம் ஆண்டு பீகார் சட்டசபை தேர்தலில் கட்சிக்கு குறைவான இடங்கள் கிடைத்ததாகவும் குற்றம் சாட்டினார்.
Related Tags :
Next Story