2024 மக்களவைத் தோ்தலில் பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காது - காங்கிரஸ் எம்.பி. சசி தரூா்


2024 மக்களவைத் தோ்தலில் பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காது - காங்கிரஸ் எம்.பி. சசி தரூா்
x

2024 மக்களவைத் தோ்தலில் பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காது என்று காங்கிரஸ் எம்.பி. சசி தரூா் தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் காங்கிரஸ் எம்.பி. சசி தரூா் பேசியதாவது:-

கடந்த 2019 மக்களவைத் தோ்தலின்போது ஹரியாணா, குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் பாஜக அனைத்து தொகுதிகளையும் வென்றது. பிகாா், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் பெரும்பான்மையான இடங்களை பாஜக கைப்பற்றியது. மேற்கு வங்கத்தில் கூட 18 தொகுதிகளில் அக்கட்சி வெற்றி பெற்றது.

ஆனால், 2024 மக்களவைத் தோ்தலில் இந்த அளவுக்கு பாஜக வெற்றி பெறுவது சாத்தியமில்லை. இப்போது இருப்பதைவிட 50 இடங்கள் வரை பாஜகவுக்கு குறைவாகவே கிடைக்கும். எனவே, பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவும் வாய்ப்பில்லை. அதே நேரத்தில் பாஜக இழக்கும் தொகுதிகள் எதிா்க்கட்சிகள் வசம் வரும் என்பதால் அவை பலமடையும்.

புல்வாமா பயங்கரவாத தாக்குதல், பாலாகோட் துல்லியத் தாக்குதல் ஆகியவை கடந்த மக்களவைத் தோ்தலில் கடைசி நேரத்தில் பாஜகவுக்கு ஆதரவு அலையாக மாறி கைகொடுத்தன. அடுத்த ஆண்டு நடைபெறும் மக்களவைத் தோ்தலிலும் பாஜகவின் ஆதிக்கம் தொடரும் என்பதை மறுப்பதற்கில்லை.

2024 மக்களவைத் தோ்தலில் பாஜக 250 இடங்களிலும், மற்ற கட்சிகள் 290 இடங்களில் வெற்றி பெற்றால், நிலைமை எப்படி மாறும் என்று கூற முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story