ஜம்மு மேயர் தேர்தலில் பா.ஜ.க. வெற்றி
புதிய மேயர், துணை மேயரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்று நடந்தது.
ஜம்மு,
ஜம்மு மாநகராட்சி மேயர் பதவியில் இருந்து பா.ஜ.க.வின் சந்தர்மோகன் குப்தா, துணை மேயர் பதவியில் இருந்து அக்கட்சியின் பூர்ணிமா சர்மா ஆகியோர் கடந்த மாதம் ராஜினாமா செய்தனர். சட்டசபை தேர்தலில் கவனம் செலுத்துவதற்காக அவர்கள் இந்த முடிவை எடுத்தனர்.
இந்நிலையில் புதிய மேயர், துணை மேயரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்று நடந்தது. இதில் பா.ஜ.க.-காங்கிரஸ் இடையே நேரடி போட்டி இருந்தது.
ஆனால் ரகசிய வாக்களிப்பு முறைக்கு பதிலாக திறந்தநிலை வாக்களிப்பு முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கவுன்சிலர்கள் இந்த தேர்தலை புறக்கணித்தனர்.
இந்நிலையில், மேயராக பா.ஜ.க.வின் ரஜிந்தர் சர்மாவும், துணை மேயராக பல்தேவ் சிங்கும் தேர்ந்தெடுக்கப்பட்டதாக ஜம்மு மாநகராட்சி கமிஷனர் ராகுல் யாதவ் அறிவித்தார்.
75 கவுன்சிலர்களை கொண்ட ஜம்மு மாநகராட்சியில் 44 கவுன்சிலர்களுடன் பா.ஜ.க. பெரும்பான்மை வகிப்பது குறிப்பிடத்தக்கது.