கால்களில் கொப்புளங்கள் வந்தாலும் நிறுத்தப்போவதில்லை, இந்தியாவை ஒன்றிணைப்போம் - ராகுல்காந்தி
கொப்புளங்கள் நம்மை தடுக்காது, இந்தியாவை ஒன்றிணைப்போம் என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரம்,
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல்காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 'பாரத் ஜோதா யாத்ரா' என்ற இந்திய ஒற்றுமை பாதயாத்திரையை கடந்த 7-ம் தேதி தொடங்கினார்.
காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை 3 ஆயிரத்து 500 கிலோமீட்டர்கள் பாத யாத்திரையாக செல்லும் இந்த பயணம் 150 நாட்கள் நடைபெற உள்ளது.
கன்னியாகுமரியில் தொடங்கிய ராகுல்காந்தியின் பாத யாத்திரை பயணம் தற்போது 6-வது நாளாக கேரளாவில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ராகுல்காந்தி இன்று தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், கால்களில் கொப்பளங்கள் வந்தாலும் , நாட்டை ஒருங்கிணைக்க நாங்கள் புறப்பட்டுள்ளோம், நாங்கள் நிறுத்தப்போவதில்லை' என தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story