விமானத்தில் ஏற ஐ.டி. ஊழியர்களுக்கு அனுமதி மறுப்பு


விமானத்தில் ஏற ஐ.டி. ஊழியர்களுக்கு அனுமதி மறுப்பு
x

விமானத்தில் ஏற ஐ.டி. ஊழியர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

பெங்களூரு:

பெங்களூரு மாரத்தஹள்ளியில் வசித்து வருபவர் யோகேஷ். இவர் ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் யோகேசும், அவரது அலுவலக ஊழியர்கள் 5 பேரும் ஜெர்மனிக்கு செல்ல பெங்களூரு விமான நிலையம் வந்தனர். அவர்களிடம் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதற்கான சான்றிதழ்களும் இருந்தன. ஆனால் அந்த சான்றிதழ்கள் விமான பயணத்திற்கு உகந்தது இல்லை என்று கூறி அவர்களை விமானத்தில் ஏற விமான நிலைய ஊழியர்கள் அனுமதி மறுத்து விட்டனர்.


இதனால் 6 பேரும் விமான நிலைய ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்தனர். 3 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களை ஏற்றுக்கொண்டு 6 பேரையும் விமானத்தில் செல்ல அதிகாரிகள் அனுமதித்தனர். இதனால் பெங்களூரு விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story