பிரம்மபுத்திரா ஆற்றில் படகு கவிழ்ந்ததில் மாயமான அதிகாரியின் உடல் 3 நாட்களுக்கு பின் மீட்பு!


பிரம்மபுத்திரா ஆற்றில் படகு கவிழ்ந்ததில் மாயமான அதிகாரியின் உடல் 3 நாட்களுக்கு பின் மீட்பு!
x

படகில் இருந்தவர்கள் பலர் நீந்தி கரை சேர்ந்துவிட்ட நிலையில், வருவாய் அதிகாரி சஞ்சுதாஸ் மாயமானார்.

கவுகாத்தி,

அசாம் மாநிலத்தில் செப்டம்பர் 29 அன்று பிரம்மபுத்திரா ஆற்றில் படகு ஒன்று கவிழ்ந்ததில் பலர் காணாமல் போயினர்.

பிரம்மபுத்திரா ஆற்றில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் தூப்ரி - பல்பாரி பாலத்திற்காக நீருக்கடியில் பாதி கட்டப்பட்டுள்ள ஒரு தூணில் மோதி படகு விபத்துக்குள்ளானது.

அந்த படகில் துப்ரி வட்ட அதிகாரியான சஞ்சு தாஸ், சில அதிகாரிகளுடன் அரிப்பு பாதித்த பகுதியை ஆய்வு செய்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்தார். அவர்களுடன் பெண்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் உட்பட உள்ளூர்வாசிகள் என மொத்தம் 28 பேர் படகில் பயணித்தனர்.

படகில் இருந்தவர்கள் பலர் நீந்தி கரை சேர்ந்துவிட்டனர். அவர்களை அப்பகுதி மக்கள் மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் மீட்ட நிலையில், வருவாய் அதிகாரி சஞ்சுதாஸ் என்பவர் மாயமானார்.

அவருடைய உடல் ஆற்றில் அடித்து செல்லப்பட்டு அண்டை நாடான வங்காளதேசத்திற்குள் சென்றிருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது. படகில் பயணித்த மீதமுள்ள 27 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு விட்டனர்.

இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை காலையில்நடந்த படகு விபத்தில் மாயமான அதிகாரியை மீட்க வங்காளதேசத்திடம் உதவி கோரப்பட்டது.அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம், எல்லை பாதுகாப்பு படை, மற்றும் ஆழ்நீச்சல் வீரர்கள் கு கடந்த 3 நாட்களாக அதிகாரி சஞ்சு தாஸின் உடலை தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

3 நட்கள் தீவிர தேடுதல் வேட்டைக்கு பின், 72 மணி நேரத்திற்குப் பிறகு வருவாய் அதிகாரி சஞ்சு தாஸின் உடல் இன்று மீட்கப்பட்டது.


Next Story