ஆந்திராவில் சிமெண்ட் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து விபத்து - ஒருவர் உயிரிழப்பு


ஆந்திராவில் சிமெண்ட் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து விபத்து - ஒருவர் உயிரிழப்பு
x

ஆந்திராவில் சிமெண்ட் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

அமராவதி,

ஆந்திர மாநிலம் ஜக்கையாபேட்டை பகுதியில் தனியார் சிமெண்ட் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் இன்று எதிர்பாராத விதமாக பாய்லர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பீகார், உத்தர பிரதேசம் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 17 தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர்.

அவர்கள் அனைவரும் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் 3 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு ஆந்திர மாநில முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார்.


Next Story