அயோத்தியில் ராமஜென்ம பூமி வளாகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் - பாதுகாப்பு தீவிரம்


அயோத்தியில் ராமஜென்ம பூமி வளாகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் - பாதுகாப்பு தீவிரம்
x

ராமஜென்மபூமி வளாகம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகள் அனைத்தும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

அயோத்தி,

உத்தரபிரதேசத்தின் அயோத்தியில் உள்ள ராமஜென்ம பூமியில் பிரமாண்டமான ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இந்த கோவில் உள்ளிட்ட ராமஜென்ம பூமி வளாகத்தை குண்டு வைத்து தகர்க்கப்போவதாக மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார்.

அயோத்தியின் ராம்கோட் பகுதியில் வசித்து வரும் மனோஜ் என்பவரின் போனுக்கு அழைத்த அவர், அந்த வளாகத்தை வியாழக்கிழமை (நேற்று) காலை 10 மணிக்கு தகர்க்கப்போவதாக கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார். உடனே இது குறித்து மாவட்ட போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

அதன்பேரில் ராமஜென்மபூமி வளாகம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகள் அனைத்தும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. அத்துடன் மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டு கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டது. அதேநேரம், இந்த மிரட்டல் தொடர்பாக வழக்கு பதிவு செய்த ராமஜென்ம பூமி போலீசார், போனில் தொடர்பு கொண்டு பேசிய மர்ம நபரை கைது செய்யும் பணிகளை முடுக்கி விட்டு உள்ளனர்.


Next Story