டெல்லியில் உள்ள பள்ளிக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்
வெடிகுண்டு சோதனை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு பள்ளி முழுவதும் தீவிர சோதனை நடத்தப்பட்டது.
புதுடெல்லி,
டெல்லி சாதிக் நகரில் உள்ள தனியார் பள்ளிக்கு இன்று இ-மெயில் மூலம் மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், பள்ளியில் இருந்து மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவரும் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.
பின்னர் வெடிகுண்டு சோதனை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு பள்ளி முழுவதும் தீவிர சோதனை நடத்தப்பட்டது. இது குறித்து டெல்லி தெற்கு டி.சி.பி. சந்தன் சவுத்ரி செய்தியாளர்களிடம் கூறுகையில், பள்ளியில் 2 சுற்றுகளாக சோதனை நடத்தப்பட்டதாகவும், தொடர்ந்து 3-வது சுற்று சோதனை நடைபெற உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் இது ஒரு போலியான மிரட்டலாக இருக்கலாம் என்று தெரிவித்த அவர், இ-மெயில் முகவரி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story