இரியூர் அருகே கார் மோதி சிறுவன் பலி ;தந்தை கண்முன்னே நடந்த சோகம்


இரியூர் அருகே கார் மோதி சிறுவன் பலி ;தந்தை கண்முன்னே நடந்த சோகம்
x

இரியூர் அருகே கார் மோதிய விபத்தில் தந்தை கண்முன்னே சிறுவன் பலியாகினார்.

சிக்கமகளூரு;

சித்ரதுர்கா மாவட்டம் இரியூர் தாலுகா பட்டரஹள்ளி கிராமத்தில் வசித்து வருபவர் துக்கப்பா. அவர் அங்குள்ள செங்கல் சூளையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சாவித்திரியம்மா. இவர்களுக்கு எல்லாபோவி, சரணாபோவி(வயது 7) என்ற 2 மகன்களும், யசோதா என்ற மகளும் உள்ளனர்.

அவரது பிள்ளைகள் ஆதிவாலா கிராமத்தில் உள்ள பள்ளிக்கூடத்தில் படித்து வருகின்றனர். இந்த நிலையில் அவா்கள் நேற்றுமுன்தினம் பள்ளிக்கு செல்வதற்காக தந்தையுடன் சாலையோரம் ஆட்டோவிற்காக காத்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த கார் ஒன்று சரணாபோவி மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட சரணாபோவி, தலையில் பலத்த காயமடைந்து பரிதாபமாக உயிரிழந்தான். தன் கண்முன்னே மகன் விபத்தில் சிக்கி உயிரிழந்தை பார்த்து துக்கப்பா கதறி அழுதார். இதுகுறித்து இரியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story