பக்ரீத் பண்டிகையையொட்டி, அட்டாரி - வாகா எல்லையில் இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்தியா மற்றும் பாகிஸ்தான் வீரர்கள்...!


பக்ரீத் பண்டிகையையொட்டி, அட்டாரி - வாகா எல்லையில் இனிப்புகளை பரிமாறிக்கொண்ட  இந்தியா மற்றும் பாகிஸ்தான் வீரர்கள்...!
x

நாடு முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் இன்று சிறப்பு தொழுகைகள் நடத்தி பக்ரீத் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.

சண்டிகர்,

தியாகத் திருநாள் அல்லது ஹஜ் பெருநாள், உலக அளவில் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை ஆகும். ஒவ்வொரு ஆண்டும் இறைதூதர் நபிகளின் தியாகத்தை போற்றும் விதமாக இஸ்லாமிய நாட்காட்டியின் பன்னிரண்டாவது மாதமான துல் ஹஜ் மாதம் 10 ஆம் நாள் இது கொண்டாடப்படுகின்றது. அந்த வகையில் நாடு முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் இன்று சிறப்பு தொழுகைகள் நடத்தி பக்ரீத் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். புத்தாடை உடுத்தியும், இனிப்புக்களை பரிமாறியும் இஸ்லாமியர்கள் தங்களின் அன்பையும், கருணையையும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டனர்.

இந்தநிலையில், பஞ்சாப் மாநிலத்தில் இந்தியா, பாகிஸ்தான் எல்லைப்பகுதி அமைந்துள்ளது. இந்தியாவின் அடாரி மற்றும் பாகிஸ்தானின் வாகா பகுதிகள் இதன் எல்லையாக அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் இரு நாட்டு எல்லைப் பாதுகாப்பு படைவீரர்களும் சந்திக்கும் பகுதியாக உள்ளது. இந்தநிலையில், பக்ரீத் பண்டிகையை ஒட்டி, அட்டாரி - வாகா எல்லையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் இனிப்புகள் மற்றும் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர்.


Next Story