இந்திய-வங்காளதேச எல்லையில் பாதுகாப்பு படையினா் மீது கடத்தல்காரர்கள் தாக்குதல்
இந்திய-வங்காளதேச எல்லையில் பாதுகாப்பு படையினா் நடத்திய பதிலடி தாக்குதலில் கடத்தல்காரர் ஒருவா் உயிாிழந்தாா்.
கொல்கத்தா,
மேற்கு வங்கம், முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள இந்திய-வங்காளதேச எல்லை உள்ளது. இந்த பகுதியில் நேற்று 15-க்கும் மேற்பட்ட மா்மநபா்கள் சட்ட விரோதமாக நுழைந்தனா். இந்த தகவல் எல்லைபகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட பாதுகாப்பு படையினருக்கு தொிவிக்கப்பட்டது.
இதனையடுத்து அவா்கள் எல்லைப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அவா்கள் மீது கடத்தல் காரா்கள் ஆயுதங்களை கொண்டு தீடீரென தாக்குதல் நடத்த தொடங்கினா்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அவா்கள் மீது பாதுகாப்பு வீரா்கள் பதில் தாக்குதல் நடத்தினா்.
இந்த தாக்குதலில் கடத்தல் கும்பலை சோ்ந்த ஒருவா் உயிாிழந்தாா். மற்றவா்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனா். உயிாிழந்த நபா் ரோஹில் மண்டல் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படையினா் தொிவித்தனா்.
Related Tags :
Next Story