மத்திய பிரதேசத்தில் பஸ்சும், லாரியும் மோதல்: 14 பேர் உயிரிழப்பு; 40 பேர் காயம்


மத்திய பிரதேசத்தில் பஸ்சும், லாரியும் மோதல்:  14 பேர் உயிரிழப்பு; 40 பேர் காயம்
x
தினத்தந்தி 22 Oct 2022 8:18 AM IST (Updated: 22 Oct 2022 9:04 AM IST)
t-max-icont-min-icon

மத்திய பிரதேசத்தில் பஸ்சும், லாரியும் மோதி கொண்டதில் 14 பேர் உயிரிழந்து உள்ளனர். 40 பேர் காயமடைந்தனர்.



ரேவா,


மத்திய பிரதேசத்தின் ரேவா மாவட்டத்தில் சுஹாகி பஹரி பகுதியருகே சென்று கொண்டிருந்த பஸ் ஒன்றும் லாரியும் மோதி கொண்டன. இந்த விபத்தில் பயணிகள் 14 பேர் உயிரிழந்து உள்ளனர். 40 பேர் காயமடைந்தனர்.

அவர்களில் 20 பேர் உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.

தெலுங்கானாவின் ஐதராபாத் நகரில் இருந்து கோரக்பூர் நோக்கி அந்த பஸ் சென்று கொண்டிருந்து உள்ளது. பஸ்சில் பயணம் செய்தவர்கள் அனைவரும் உத்தர பிரதேச மாநில மக்கள் என ரேவா மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு நவ்னீத் பசின் கூறியுள்ளார்.

இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர். தொடர்ந்து விபத்து நடந்ததற்கான காரணம் பற்றி விசாரணை நடந்து வருகிறது.


Next Story