8 கி.மீ. தவறான பாதையில் வந்த பள்ளி பஸ், கார் மீது மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலி


8 கி.மீ. தவறான பாதையில் வந்த பள்ளி பஸ், கார் மீது மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலி
x

பள்ளி பஸ் நெடுஞ்சாலையில் தவறான பாதையில் 8 கிலோமீட்டர் தூரம் வந்துள்ளது.

டெல்லி,

தலைநகர் டெல்லி - மீரட் நெடுஞ்சாலையில் இன்று காலை காரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் பயணித்தனர். கார் மீரட்டில் இருந்து குருகிராம் நோக்கி சென்றுகொண்டிருந்தது.

காலை 6 மணியளவில் காசியாபாத் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென நெடுஞ்சாலையின் தவறான பாதையில் பள்ளி பஸ் வேகமாக வந்தது. அந்த பஸ் கார் மீது வேகமாக மோதியது.

இந்த கோர விபத்தில் காரில் பயணித்த 6 பேர் உயிரிழந்தனர். மேலும், 2 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மேலும், விபத்தை ஏற்படுத்திய பள்ளி பஸ் டிரைவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் பள்ளி பஸ்சில் மாணவ, மாணவிகள் யாரும் இல்லை என்பதும் டிரைவர் பஸ்சை 8 கிலோமீட்டர் தூரம் நெடுஞ்சாலையில் தவறான பாதையில் ஓட்டி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, கைது செய்யப்பட்ட பள்ளி பஸ் டிரைவர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த விபத்து தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.



Next Story