உத்தரகாண்டில் 22- பேருடன் சென்ற பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து


உத்தரகாண்டில்  22- பேருடன் சென்ற பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து
x

உத்தரகாண்டில் 22- பேருடன் சென்ற பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

டேராடூன்,

மலைபிரதேசங்கள் நிறைந்த உத்தரகாண்ட் மாநிலத்தில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. சுற்றுலாவிற்கு பெயர் போன முசோரி-டேராடூன் சாலையில் சென்று கொண்டிருந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பள்ளத்தில் விழுந்துள்ளது.

இந்த பேருந்தில் ஓட்டுநர் உள்பட 22 பேர் பயணம் செய்துள்ளனர். இந்த தகவல் கிடைத்து விரைந்து வந்த இந்தோ- திபெத்தியன் எல்லை பாதுகாப்பு போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். காயம் அடைந்த அனைத்து பயணிகளும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Next Story