மங்களூருவில் 14-வது மாடியில் இருந்து குதித்து தொழில் அதிபர் தற்கொலை


மங்களூருவில்  14-வது மாடியில் இருந்து குதித்து தொழில் அதிபர் தற்கொலை
x
தினத்தந்தி 7 Aug 2023 12:15 AM IST (Updated: 7 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மங்களூருவில் 14-வது மாடியில் இருந்து குதித்து தொழில் அதிபர் தற்கொலை செய்து கொண்டார்.

மங்களூரு-

தட்சிண கன்னடா மாவட்டம் கத்ரி போலீஸ் எல்லைக்குட்பட்ட பைந்தூர் பகுதியை சேர்ந்தவர் மோகன் அமீன். இவர் அதே பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். இவர் சொந்தமாக கட்டுமான நிறுவனம் நடத்தி வந்தார். கடந்த சில நாட்களாக இவர் மிகவும் மன வேதனையில் காணப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் தான் வசித்து வரும் குடியிருப்பின் 14-வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதை குடியிருப்பில் இருந்தவர்கள் பார்த்து கத்ரி போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கத்ரி போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. கடன் தொல்லையா? குடும்ப பிரச்சினையா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து போலீசார் கத்ரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story