பராமரிப்பு பணிகளால் ரெயில் சேவைகளில் மாற்றம்
பராமரிப்பு பணிகளால் ரெயில் சேவைகளில் மாற்றப்படுகிறது.
பெங்களூரு: தேவரகுட்டா-பேடகி இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தென்மேற்கு ரெயில்வே ெவளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், உப்பள்ளி-சித்ரதுர்கா-உப்பள்ளி தினசரி எக்ஸ்பிரஸ் ரெயில்கள் (17347/48) நாளை (ஞாயிற்றுக்கிழமை) ரத்து செய்யப்படுகிறது. இதேபோல் அரிசிகெரே-உப்பள்ளி தினசரி ரெயில் (16213), அரிசிகெரே-ஹாவேரி இடையே பகுதியாக ரத்தாகிறது.
பெலகாவி-மைசூரு விஷ்வமாணவ் தினசரி ரெயில் (17325) பெலகாவி-ராணிபென்னூர் இடையேவும், கே.எஸ்.ஆர். பெங்களூரு-உப்பள்ளி ஜனசதாப்தி ரெயில் (12079) ஹரிஹரா-உப்பள்ளி இடையேவும், உப்பள்ளி-கே.எஸ்.ஆர். பெங்களூரு ரெயில் (12080), உப்பள்ளி-ஹரிஹரா இடையேவும் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த உத்தரவு வருகிற 30-ந் தேதி (நாளை) மட்டும் அமலில் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story