மேற்கு வங்காளத்தில் மந்திரி சபை விரிவாக்கம் - புதிதாக 9 மந்திரிகள் பதவியேற்பு


மேற்கு வங்காளத்தில் மந்திரி சபை விரிவாக்கம் - புதிதாக 9 மந்திரிகள் பதவியேற்பு
x

மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்கு வங்காள மந்திரி சபை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தில் முன்னாள் கல்வி மந்திரி பார்த்தா சாட்டர்ஜி, ஆசிரியர் நியமன முறைகேடு விவகாரத்தில் கைது செய்யப்பட்டு சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். மேற்கு வங்காள அரசியலில் திருப்பு முனையை ஏற்படுத்திய இந்த விவகாரத்தில், மந்திரி மற்றும் கட்சி பதவிகளில் இருந்து பார்த்தா சாட்டர்ஜி நீக்கப்பட்டார்.

மேலும் மந்திரி சபையில் இடம் பெற்று இருந்த திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சுப்ரதா முகர்ஜி, மற்றும் சதன் பாண்டே ஆகியோர் சமீபத்தில் மரணம் அடைந்துவிட்டனர். இதனையடுத்து மேற்கு வங்காள மந்திரி சபையை மாற்றி அமைக்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி முடிவு செய்தார். இதில் புதுமுகங்கள் சிலருக்கு மந்திரி பதவி கொடுக்க உள்ளதாக மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

அதன்படி மேற்கு வங்காள மந்திரி சபை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதில் புதிதாக 9 பேர் இடம்பெற்றுள்ளனர். பாபுல் சுப்ரியோ, சினேகாசிஸ் சக்ரபோர்த்தி, பார்த்தா போமிக், உதயன் குஹா, ப்ரதீப் மஜும்தார், தாஜ்முல் ஹுசைன், சத்யஜித் பர்மன், பிர்பஹா ஹன்ஸ்தா மற்றும் பிப்லப் ராய் ஆகிய 9 பேர் இன்று மந்திரிகளாக பதவியேற்றுக் கொண்டனர்.

இவர்களுக்கு மேற்கு வங்காள கவர்னர் இல.கணேசன் பதிவி பிரமானம் செய்து வைத்தார். இதில் பாபுல் சுப்ரியோ, பா.ஜ.க.வில் இருந்து கடந்த ஆண்டு திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story