சுதந்திர போராட்டத்தில் காங்கிரசின் பங்களிப்பை மறந்துவிட முடியாது- சிவசேனா
சுதந்திர போராட்டத்தில் காங்கிரசின் பங்களிப்பை மறந்துவிட முடியாது என சாம்னாவில் கூறப்பட்டுள்ளது
மும்பை
நாட்டின்சுதந்திர தின அமுத விழா கொண்டாட்டம் தொடர்பாக சாம்னாவில் வெளியான கட்டுரையில், சுதந்திர போராட்டத்தில் காங்கிரசின் பங்களிப்பை மறந்துவிட முடியாது என கூறப்பட்டுள்ளது. சாம்னா கட்டுரையில் கூறப்பட்டு இருப்பதாவது:- ஆகஸ்ட் 15-ந் தேதி சுதந்திர தின அமுத விழா. மோடி எல்ேலாரையும் கொண்டாடுமாறு கூறுகிறார்கள். மூவர்ண கொடி வினியோகிக்கப்படுகிறது. ஆனால் இந்த கொண்டாட்டம் எதை பற்றியது?. சுதந்திர போராட்டத்தில் காங்கிரசின் பங்களிப்பை மறந்துவிட முடியாது.
திலகர் முதல் நேரு வரை அதிக போராடினார்கள். அவர்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டனர். ஆனால் காங்கிரசை ஒதுக்கி வைத்துவிட்டு அமுத விழா கொண்டாட்டம் நடக்கிறது. பெயருக்காக காந்தியின் பெயர் ஆகஸ்ட் 15-ந் தேதி எடுக்கப்படுகிறது. ஆனால் கடந்த 7-8 ஆண்டுகளாக சுதந்திரத்திற்கு காங்கிரஸ் எதுவும் செய்யவில்லை போன்ற பிம்பத்தை உருவாக்குவதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. 2014-க்கு பிறகு தான் நாட்டுக்கு சுதந்திர தினம் கிடைத்ததாக கூறியவர்கள் ஆட்சியில் உள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.