கார்-மோட்டார் சைக்கிள் மோதல்; 4 பேர் படுகாயம்


கார்-மோட்டார் சைக்கிள் மோதல்; 4 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 8 Oct 2022 6:45 PM GMT (Updated: 8 Oct 2022 6:45 PM GMT)

சாகர் அருகே கார்-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 4 பேர் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிவமொக்கா;


சிவமொக்கா மாவட்டம் சாகர் தாலுகா இக்கேரி-ஆவினஹள்ளி சாலையில் நேற்றுமுன்தினம் காரும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் தூக்கி வீசப்பட்டு லேசான காயம் அடைந்தார்.

மேலும் காரில் வந்த தனிஷ், கைருன்னிஷா, தவ்பிக், பிதா ஆகிய 4 பேர் பலத்த காயம் அடைந்தனர். இந்த விபத்தை பார்த்த அந்தப்பகுதியில் இருந்தவர்கள், 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சாகர் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story