கார்-மோட்டார் சைக்கிள் மோதல்; மருத்துவ மாணவர் பலி


கார்-மோட்டார் சைக்கிள் மோதல்; மருத்துவ மாணவர் பலி
x
தினத்தந்தி 8 Oct 2022 7:00 PM GMT (Updated: 8 Oct 2022 7:00 PM GMT)

பிரியபட்டணா அருகே கார்-மோட்டார் சைக்கிள் மோதி கொண்ட விபத்தில் மருத்துவ மாணவர் உயிரிழந்தார்.

மைசூரு;


மைசூரு மாவட்டம் பிரியபட்டணா தாலுகா தனியார் கல்லூரி ஒன்று இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் சிக்கமகளூரு மாவட்டம் தரிகெரே தாலுகா ஒசமநே கிராமத்தை சோந்த நூத்தன் (வயது 19) என்ற வாலிபர் மருத்தும் படித்து வந்தார்.

இந்தநிலையில் அவர் விடுமுறை நாளான நேற்று பெட்டதபுரா கிராமத்தில் உள்ள தனது மாமா வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார்.

அப்போது பெட்டதபுராவில் இருந்து வந்து கொண்டிருந்த கார் ஒன்று, நூத்தன் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் அவர் தூக்கிவீசப்பட்டு படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து பெட்டதபுரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story