மரத்தில் கார் மோதி 6 இளைஞர்கள் பலி - திருமணத்திற்கு சென்று திரும்பியபோது சோகம்
அரியானாவில் மரத்தில் கார் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் 6 இளைஞர்கள் உயிரிழந்தனர்.
சண்டிகர்,
அரியானா மாநிலம் ஹிசர் மாவட்டத்தில் நேற்று அதிகாலை 7 இளைஞர்கள் ஒரு காரில் திருமண நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு திரும்பிக்கொண்டிருந்தனர். அரோகா - அடம்பூர் சாலையில் கிஷன்கர் பகுதியில் வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் காரில் இருந்த சாஹர் (வயது 23), சோபித் (22), அரவிந்த் (24), அபினவ் (22), தீபக் (23) ஆகிய 6 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். புனேஷ் என்ற இளைஞர் படுகாயமடைந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் உயிரிழந்த இளைஞர்களின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அதிவேகமே இந்த விபத்துக்கு காரணம் என முதற்கட்ட தகவல் வெளியான நிலையில் இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story