ஒன்னு வேணா..ரெண்டு கொடுங்க...தாம்பூல பையில் தேங்காயுடன் சரக்கு பாட்டில்...டாஸ்மாக் கடையாக மாறிய திருமண மண்டபம்...!


ஒன்னு வேணா..ரெண்டு கொடுங்க...தாம்பூல பையில்   தேங்காயுடன் சரக்கு பாட்டில்...டாஸ்மாக் கடையாக மாறிய திருமண மண்டபம்...!
x
தினத்தந்தி 1 Jun 2023 8:52 AM GMT (Updated: 1 Jun 2023 11:56 AM GMT)

புதுச்சேரியில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், தாம்பூலம் பையில் வைத்து மதுபானம் வழங்கப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

புதுச்சேரி,

இருமனங்கள் இணையும் புனித உறவான திருமண விழாவில் உறவினர்கள், நண்பர்களை அழைத்து மணமக்களை வாழ்த்த கூறி விருந்து வைப்பார்கள். திருமணத்திற்கு வந்தவர்களுக்கு மகிழ்ச்சியோடு தாம்பூலப்பை பரிசளிப்பார்கள். மணமக்கள் வீட்டில் கொடுக்கும் அந்த பையில் பழங்கள், தேங்காய், பிஸ்கெட் பாக்கெட், பாத்திரங்கள்,இனிப்புகள் மற்றும் என வைத்து வழங்குவர்.

தற்போது திருமண விழாக்களில் பசுமையை பரப்பும் முயற்சியாக தாம்பூலப் பையில் மரக்கன்றுகள் வழங்கப்படுகின்றன. புத்தகங்களும் கூட வழங்கப்படுகின்றன. இதுபோன்ற பரிசுப்பொருட்கள் கொடுக்கும் திருமண வீட்டினரை உறவினர்கள் பாராட்டும் தெரிவித்து வருகின்றனர்.

இந்தநிலையில், புதிய டிரெண்டு என கூறிக்கொண்டு திருமண தாம்பூல பைகளில் மதுபாட்டில் கொடுக்கத் தொடங்கி விட்டனர். அந்தவகையில்,புதுச்சேரியை சேர்ந்த ஆர்த்தி என்பவருக்கும் திருமணம் முடிந்து, அவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சி புதுச்சேரியில் நடைபெற்றது.

திருமண வரவேற்பு நிகழ்ச்சியின் தாம்பூலப்பையில் தேங்காய், பழங்களுடன் மதுபாட்டிலும் கூடவே பிஸ்கெட் பாக்கெட்டும் கொடுத்துள்ளனர். ஒரு பெட்டி நிறைய மது பாட்டில்களை வைத்துக்கொண்டு தாம்பூல பை வாங்கும் போது ஒரு குவர்ட்டர் பாட்டிலை போட்டு கொடுத்தனர்.

அப்போது மணமகள் வீட்டார் சார்பில், தாம்பூல பையில் மதுபான பாட்டில்களை வழங்கியது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுபோன்ற நிகழ்வுகளை தவிர்க்க வேண்டும் என்று விழாவிற்கு வந்த உறவினர்கள் தெரிவித்துள்ளனர். மணமக்களை வாழ்த்த வருபவர்களுக்கு விஷத்தை கொடுப்பது போல தாம்பூல பையில் மது பாட்டிலை வைத்து கொடுக்கலாமா என கேள்வி எழுப்பியுள்ளனர்.


Next Story